Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தஞ்சையில் ஒரு சிலரை தவிர அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர்

தஞ்சாவூர், ஜூலை 3: தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாநகரில் உள்ள மேல வீதி, சோழன் சிலை, தொம்பன் குடிசை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், இன்சூரன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்

கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தப்பட்டது.இதுகுறித்து போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களில் செல்போர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில் ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டு உரிமையாளர்கள் கட்டவில்லை என்றால் மறுமுறை அபராதம் விதிக்கும் போது அதன் தொகை ரூ.2500 ஆக அதிகரித்து விடும். அதேபோல் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அவரது தொகையை செலுத்தாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தஞ்சாவூரில் தற்போது அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்கி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அதனை பின்பற்றுவது இல்லை. எனவே வருங்காலங்களில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் நிலையை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.