Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்பகோணத்தில் 243 மாணவர்களுக்கு ரூ.11.79 கோடி கல்வி கடனுதவி

கும்பகோணம், நவ. 2: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்திர கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து கல்விக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ரேவதி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றனர்.இந்த முகாமில் வேளாண்துறை அமைச்சர் 243 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.11.79 கோடி மதிப்பிலான வங்கி கடன்களை வழங்கினார்.விழாவில் அமைச்சர் வினோத் ரவி பேசியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனைத்து வங்கிகளை ஒருங்கிணைத்து முதற்கட்ட கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. 11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்ற இந்த முகாமில் மொத்தம் 243 மாணவ மாணவிகளுக்கு மொத்தம் ரூ.11.79 கோடி மதிப்பிலான வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் கல்விக்கடன் விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது.

இதில் இதுவரை 934 விண்ணப்பங்கள் ரூ.53.34 கோடி மதிப்பிலான கல்விக்கடன் நமது மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 459 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இம்மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் 2000 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வித்யாலட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி கடன் வசதியை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் சுதா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, தஞ்சாவூர் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.