தஞ்சாவூர், அக். 2: சூலமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தினை முழுமையாக தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சூலமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் பணிதள பொறுப்பாளர்களை சுழற்சி முறையில் பணி வழங்கிடமும் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விடுதலை குமரன், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், மையக்குழு உறுப்பினர் அருண்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் சங்கர் துரைக்கண்ணன், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


