Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவிடைமருதூர் திருவிசநல்லூரில் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் தொடக்க பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பால் பெற்றோர் கவலை

திருவிடைமருதூர், ஜூலை 2: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில் புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருவிசநல்லூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறனர். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 5 வருடமாக விடுப்பு எடுக்காமல் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் இந்தப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையான கல்வி கற்பிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் சில பள்ளிகள் 5 கி.மீ. தொலைவில் இருப்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.