Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு நேர்முகத்தேர்வு: ஜூன் 4ல் ஆவின் தலைமையிடத்தில் நடைபெறுகிறது

தஞ்சாவூர், ஜூன் 2: தஞ்சை கலெக்டர் ரேவதி விடுத்துள்ள தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் RGM திட்டம் 2024-2025 மூலம் செயல்படுத்தி வரும் தேசிய பால்பதிவு திட்டத்தில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், தங்களின் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் வருகின்ற 4.6.2026 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நேரடியாக நேர்முக தேர்வில் கலந்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு, தரமான கால்நடை மருத்துவ வசதி அளிக்கவும், செயற்கை கருவூட்டல், சினைபரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்கவும், ஒன்றியத்தின் விவகார எல்லைக்குட்பட்ட பட்டுக்கோட்டை சரகத்திற்கு ஒன்றும் மற்றும் தஞ்சாவூர் சரகத்திற்கு ஒன்றும் என மொத்தம் 2 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு,

ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டிற்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், தங்களின் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் வருகின்ற 4.6.2026 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நேரடியாக நேர்முக தேர்வில் கலந்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.