Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் திருவிடைமருதூரில் 152வது புதிய கிளை திறப்பு

கும்பகோணம், ஜூலை 1: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 122 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் 152-வது புதிய கிளை திறப்பு விழா

29.6.2026 திங்கட்கிழமையன்று No.46, மகாதான வீதி, திருவிடைமருதூர்-612 104, தஞ்சாவூர் மாவட்டம் என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிதியின் தலைவர் கல்யாணசுந்தரம் எம்.பி விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமலிங்கம் முன்னாள் எம்.பி, மேலாண் இயக்குநர் வேலப்பன் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர ஜெயபால் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் புனிதா சுந்தர ஜெயபால் புதிய கிளையை திறந்து வைத்தார்.

ராம.மெ.சத்திரம் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன் மற்றும் நாச்சியப்பன் ஆகியோர் பாதுகாப்பு பெட்டக அறையினை திறந்து வைத்தனர். ஆடுதுறை இளங்கோவன், அளகேசன் DSP, வர்த்தக சங்கத் தலைவர் மகாலிங்கம், நிதியின் இயக்குநர்கள் குருபிரசாந்த், ரவிச்சந்திரன், பொது மேலாளர் & தலைமை நிதி அதிகாரி சண்முகம், துணைப் பொது மேலாளர் கருணாநிதி, உதவி பொது மேலாளர்கள் கணேசன், முன்னாள் உதவி பொது மேலாளர் முருகேசன், பணியாளர் முன்னேற்ற சங்க கௌரவத்தலைவர் பாரி, பொருளாளர் ராஜராஜன், கிளை மேலாளர் கங்கா, ஊழியர்கள், பங்குதாரர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், ஆசிரிய பெருமக்கள், வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விவசாயிகள் வெளிநடப்பு

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகள் என கருதாமல் பாரபட்சம் இன்றி அறிவித்துள்ள பயிர் கடனை அரசு உடனே மறுபரிசீலனை செய்து முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.