Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம் வழியாக நெல்லையில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க துரித நடவடிக்கை

கடையநல்லூர், நவ.2: நெல்லையில் இருந்து தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம் மதுரை, கரூர், சேலம் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் சேவை விடவும், கடையநல்லூர் அடுத்த நயினாரகரம் ரயில் நிலையத்தை முழுமையாக சீரமைத்து அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு. ராசேந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மதுரையில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: வண்டி எண் 16101/16102 < tel:1610116102 > தாம்பரம் - கொல்லம் தாம்பரம் விரைவு இரயிலை பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

கடையநல்லூர் தென்காசி ரயில் நிலையங்களுக்கிடையே மீட்டர் கேஜ் காலம் தொட்டு இயங்கிவந்த நயினாரகரம் ரயில் நிலையத்தை மீண்டும் புனரமைத்து அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் இருந்து தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம் மதுரை, கரூர், சேலம் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் சேவையை துவங்க வேண்டும். வாரம் ஒருமுறை செல்லும் நெல்லை - மேட்டுப்பாளையம் (வழி-கடையநல்லூர்) வாராந்திர ரயில் சேவையை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும். நெல்லை கொல்லம் பகல் நேர பயணிகள் இரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

வண்டி எண் 20681/20682< tel:2068120682 > சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் வண்டி எண் 20683/20684 < tel:2068320684 > தாம்பரம் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படுவதை தினசரி ரயில்களாக மாற்றி இயக்க வேண்டும். வண்டி எண் 16721/16722 < tel:1672116722 > கோயம்புத்தூர் மதுரை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸை இராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தென்காசி - செங்கோட்டை இடையே உள்ள 8 கி.மீ. ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் வழிப்பாதையாக மாற்ற வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மனு கொடுக்கும் போது திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் காசி தர்மம் துரை, பாண்டியராஜன், சுபாஷ் பங்கேற்றனர்.