Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தஞ்சை கீழவாசல் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தஞ்சாவூர், ஆக.21: தஞ்சை கீழவாசல் பகுதி கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் செல்லும் வழியில் ஏராளமான கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மேலும் கீழவாசல் பகுதியில் கிழக்கு காவல் நிலையம், தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், போக்குவரத்து சிஆர்சி டிப்போ உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகிறது.

இந்த வழியாக கரந்தை, பள்ளியக்ரஹாரம், கண்டியூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த சாலை முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.