விபத்தை உருவாக்கும் சாலை களை எடுக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி போனதால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர், ஆக.21: களை எடுக்க கூட தண்ணீர் கிடைக்காமல்குறுவை பயிர்கள் காய்ந்து கருகி போனதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு, குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காடு பகுதியில் ஆதிஸ்வரன் என்ற விவசாய மூன்று ஏக்கரில் நேரடி விதைப்பில் குறுவை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் மழை பொய்த்து போனதாலும், ஆழ்துளை கிணறுக்கு நிலத்தடி நீர் இல்லாமல் போனதாலும், காவிரி வறண்டதாலும் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
இதனால் நடவு செய்து 45 நாட்களே ஆன இளம் பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது. மேலும் களையெடுக்க முடியாமல் விளைநிலங்கள் முழுவதும் களைமண்டி கிடக்கிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிர்கள் கருகி போனதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளாக வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல் மழை பெய்தாலும் இந்த பயிரை காப்பாற்ற முடியாது என கூறுகிறார். எனவே பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


