தஞ்சாவூர், ஆக.19: பயிர்க்கடன் தள்ளுபடி விஷயத்தில் விவசாயிகளை அவமானப்படுத்தும் நிலையை கைஅவிட வேண்டும் என அரசுக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறுகையில்;
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதில் விவசாயிகளை அவமானம் செய்யும் அவலநிலைய கைவிட்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தை வரவேற்ற விவசாயிகள் ஆட்சி மாற்றத்தால் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பாடு என கருதினர். ஆனால் தாங்களின் தேர்தல் வாக்கு உறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என சொல்லி தமிழக வெற்றி கழக அரசு தற்போது தனது தேர்தல் வாக்கு உறுதியில் சொல்லியபடி விவசாயிகள் வாங்கிய முழு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வதில் மிகவும் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
காரணம் இது வரை மூன்று முறை விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய முதலில் ஐம்பது சதவீதம் பிறகு எழுபத்து ஐந்து சதவீதம் தற்போது ஒரு லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு எழுபத்து ஐந்து ஆயிரம் என தள்ளுபடி அறிவித்துவுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் என டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் மிகவும் கொதித்து எழுந்து மிகவும் வேதனையில் வெந்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த ஆண்டுகளில் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்காததால் குறுவை சாகுபடி மிகவும் குறைந்து உள்ளது. சம்பா தாளடி சாகுபடிக்கு நடக்குமா? இல்லை டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்கள் எல்லாம் பாலைவனமாக மாறி அழியும் அபாய நிலையில் உள்ளது.
தமிழக முதல்வர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதில் தொடர்ந்து சதவீதம் போடுவதில் தொடர் வண்ணமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு இது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக முதல்வர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களை அழைத்து தலைமை செயலகத்தில் இது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என சொல்லியும் ஒரு சில சங்கங்களை அழைத்து நடத்தினார்கள்.
அதுவும் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் மூன்றாவது பெரிய விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து இருப்பது விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஏற்று கொள்ள முடியாதது. எனவே குறைந்தது ஐந்து ஏக்கர்க்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தின் நிதிநிலை பற்றக்குறைய காரணம் காட்டி விவசாயிகள் தொடர்ந்து அவமானம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட கூடாது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- குறைந்தது ஐந்து ஏக்கர்க்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
- தமிழகத்தின் நிதிநிலை பற்றக்குறைய காரணம் காட்டி விவசாயிகள் தொடர்ந்து அவமானம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட கூடாது.
- தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.


