Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒரத்தநாடு, மே 26: தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே, அரசு மகளிர் காவல் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அதே வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடிமகன்களால் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்படுவதால் உடனடியாக, தமிழ்நாடு அரசு அங்கு செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.