தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்காக நாகப்பட்டில் வீடுகள், கட்டிடங்கள் அளவீடு செய்யும் பணி தொடக்கம்: கிராம மக்கள் வேதனை

காஞ்சிபுரம், அக்.29: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் அமைய உள்ள கிராமங்களில் ஒன்றான நாகப்பட்டு கிராமத்தில் வீடுகள், கட்டிடங்களை அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் பணி தொடங்கப்பட்டதால், கிராம மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள், பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு, விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களின் எதிர்ப்பையும், போராட்டத்தையும் கருத்தில் கொள்ளாமல், நிலம் எடுப்புக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன், ஒரு பகுதியாக விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களில் ஒன்றான பரந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகப்பட்டு கிராமத்தில் உள்ள 75 வீடுகள், கட்டிடங்களை, நிலம் எடுப்பு தனி தாசில்தார் பிரகாஷ் தலைமையில், வருவாய் துறையினர், பொதுப்பணி துறை கட்டிடங்கள் பிரிவு ஊழியர்கள் துல்லியமாக அளவீடு செய்து கட்டிடங்களின் தன்மை உயரம் பயன்படுத்தி உள்ள பொருட்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொண்டு ஆவணப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, கிராம மக்கள் கேள்விகள் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை பாதுகாப்போடு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், வீடுகளை அளவிடு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதால், கிராம மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement