Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதய தின விழிப்புணர்வு பேரணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: உலக இதய தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த பேரணியை ஐட்ரீம்ஸ் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இதய தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உலக இதய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விழிப்புணர்வு பேரணி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த பேரணியை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

பின்னர், இதயவியல் துறையின் தலைவர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்தாண்டு 68,619 புறநோயாளிகளும், 15,188 உள்நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் 44,267 எக்கோ கார்டியோகிராம், 24,690 ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் அனுமதிக்கப்ட்ட ஒரு மணிநேரத்திற்குள் உறைகுழாய் வைத்தல் போன்ற சிகிச்சைகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட இதயம் காப்போம் மற்றும் ஸ்டேமி மாரடைப்பு திட்டம் போன்ற முதன்மை திட்டங்கள் மூலமாக மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே லோடிங் டோஸ் எனப்படும் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் வெகுவாக குறைவதுடன், நீண்ட நாட்கள் அவர்கள் வாழ்வதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

மேலும் மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்றன. இத்திட்டங்கள் மூலம் பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதில் இம்மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது,’’ என்றார். மூத்த இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் ‘இதய நோய்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இத்துறையின் சார்பாக செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இதய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதயநோய் தடுப்பதற்கான உணவுமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர் பாலாஜி, பேராசிரியர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்ட்னர்.