நவராத்திரி விழா சிறப்பு பூஜை
காரிமங்கலம், அக்.11: காரிமங்கலம் வாணியர் தெருவில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 8ம் நாள் விழாவில் அம்மன் பிரியத்திங்கா தேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளானோர் அம்மனை வழிபட்டனர்.
Advertisement
Advertisement