தேவகோட்டை, அக்.29: தேவகோட்டை நகராட்சியில் மாவட்ட காசநோய் பிரிவு சார்பாக, தூய்மை பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் பரிசோதனைகள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் 49 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமை தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் ஆணையாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் துவங்கி வைத்தார்கள். நிகழ்வில் துப்புரவு அலுவலர் பாண்டி செல்வம், துப்புரவு ஆய்வாளர் பிருந்தா, திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆலோசகர் முருகன் மற்றும் முதல் நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வினோத், சுகாதாரப் நலபார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் நுண்கதிர்வீச்சாளர் சதீஷ்குமார், மருந்தாளுனர் விக்னேஷ், அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


