Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போலியோ தின விழிப்புணர்வு

காளையார்கோவில், அக்.29: காளையார்மங்கலத்தில் உலக போலியோ தின விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள காளையார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போலியோ தின விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மகிழ் முற்ற சீருடைகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்து உரையாற்றினார். ஆசிரியை மல்லிகா வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு மகிழ் முற்ற சீருடைகளை வழங்கி சிறப்பித்தார். சீருடைகளை அணிந்து மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை நாடகம், நடனம் பேச்சு திருக்குறள் ஒப்புவித்தல் பல குரல் பேச்சுகள் மூலம் வெளிப்படுத்தினர். ஆசிரியர் கோபி கண்ணன் நன்றி கூறினார். ஆசிரியைகள், கணினி பயிற்றுநர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.