Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, அக்.23: மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் முன் மாதிரியான சேவை விருது வழங்கப்பட உள்ளது.

விருது மற்றும் 4 பிரிவின் கீழ் தலா ரூ.1,00,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். விருதிற்கு தங்களது கருத்துருவினை வருகின்ற 30.10.2026ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், முதல் தளம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். 04575 240166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.