திருப்புத்தூர், அக்.23: திருப்புத்தூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு விழாவில். திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு, வெற்றிலை பாக்கு வளைகாப்பு தட்டு, கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருட்களோடு கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வு குறித்து கையேடும் வழங்கினார்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு 7 வகையான உணவுகளை பரிமாறினார். இந்த விழாவில் 137 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


