Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நகை கொள்ளையில் 2 பேர் கைது

மானாமதுரை, அக்.23: மானாமதுரை அண்ணாமலை நகரில் வசித்து வருபவர் பாண்டி(67). மானாமதுரை மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.82 ஆயிரம் கொள்ளை போனது. புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரண்டு பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, அண்ணாமலை நகரில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீண்டும் மானாமதுரையில் கொள்ளையில் ஈடுபட நோட்டமிட வந்த போது ேபாலீசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியை சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ்(35), மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என்றனர்.