Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விபத்தில் காயமடைந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

திருப்புவனம், மே 15: திருப்புவனம் அருகே அரசு பஸ் - சரக்கு வேனில் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10ம் தேதி சரக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் வன்னிக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் முன்னே சென்ற சரக்கு வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில் சரக்கு வேனிலிருந்த கடலூர் பகுதியைச் சிவா(40), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கிஷோர் படேல் (22) மற்றும் அணில், புஷ்பராஜ் உள்ளிட்ட 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிவா, ராஜ்கிஷோர் படேல் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.