சிங்கம்புணரி, நவ.5: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் ஆணையாளர்கள் சண்முகம், ஃபிராங்களின் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் வட்டாரத் தலைவராக சிலம்பாயி, துணைத் தலைவர்களாக சிவகாமி, செல்வக்குமார், சித்ரா தேவி, செயலாளராக ஞான விநாயகன், துணைச் செயலாளர்களாக இளையராஜா, செல்வி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக கீதா, யுவனா, பொருளாளராக பாக்கிய குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் சிங்கம்புணரியில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் பேருந்து பணிமனை அமைக்க வேண்டும், வட்டாரம் கல்வி அலுவலகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அலுவலக கட்டிடம் அமைக்க வேண்டும், சிங்கம்புணரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சொந்தமாக கட்டிடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


