திருவாடானை, நவ.5: திருவாடானை அருகே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவணி கண்மாய் பகுதியில் இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அடிபட்டு உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினரும், கால்நடை மருத்துவக் குழுவினரும் காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று புதைத்து விட்டனர்.


