Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தனியார் மயத்திற்கு எதிர்ப்பு பத்திர எழுத்தர்கள் போராட்டம்

தேவகோட்டை, நவ.4: பத்திரப்பதிவுத் துறையை தனியார் மயம் ஆக்குவதைக் கண்டித்து பத்திர எழுத்தர் சங்கத்தினர் தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டுப் பாட்டில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தொண்டி, மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதால், இத்தொழிலை நம்பியுள்ள 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். பதிவுத்துறை தனியார்மயம் ஆக்குவதை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இதையொட்டி, அவர்கள் கடைகளைத் திறக்கவில்லை. இதனால்,பத்திரப் பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.