சிவகங்கை, நவ.4: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கோவையில் பள்ளி மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான ஆசிரியர், தலைமையாசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராஜா தலைமை வகித்தனர். ஒண்டிவீரக்குமார் வரவேற்றார். விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மண்டல செயலாளர் உமாமகேஸ்வரன் தொடங்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் தமிழ்முருகன், தமிழ்வாணன் சிறப்புரையாற்றினர். முதன்மை செயலாளர் முகிலரசன் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, எஸ்டிபிஐ மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


