சிவகங்கை, நவ.4: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உடனடியாக விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளர் மருது தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கண்டன உரையாற்றினார். இதில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் காமராஜ், மணவழகன், மாரி, ராஜா, மஞ்சுளா, பாண்டிமீனாள், காளிமுத்து, முருகேசன், ஆறுமுகம், பில்லப்பன், முருகேசன், திருச்செல்வம், குணாளன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நகரச் செயலாளர் சகாயம் நன்றி கூறினார்.


