தொண்டி, ஜூலை 17: தொண்டியில் ராமநாதபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் டெங்கு எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. திருவாடானை வட்டார அளவில் டெங்கு எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு நேற்று டெங்கு எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி துவக்கி வைத்தார். தொண்டி பேருராட்சியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிவழியாக வந்து புது பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.டெங்கு நோய் குறித்து பதாகைகள் ஏந்தி வந்தனர். தொண்டி எஸ்ஐ ஆசைக்குமார், மருத்துவ அலுவலர் ரிஃபா, வட்டார சுகாதார மேற்பார்வைபாளர் செந்தில், சுகாதார ஆய்வாளர் சந்தானராஜ், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement



