Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி

சிவகங்கை, பிப்.16: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை மற்றம் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கவுள்ளது.

இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராகவும், 18 முதல் 35வயதிற்குட்பட்டவராகவும், எட்டாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.3லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பயிற்சி இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நடைப்பெறவுள்ளது. இப்பயிற்சிக்கான 90 நாட்கள் கால அளவு, விடுதியில் தங்குவதற்கான செலவினத்தொகை மற்றும் உணவு செலவினத்தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும்.