Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கோடைகால பயிற்சி முகாம் ஏப்.17 முதல் தொடக்கம்

சிவகங்கை, ஏப். 14: மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம்கள் ஏப்.17 அன்று தொடங்க உள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 2026ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, கோகோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் ஏப்.17 முதல் மே.1ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில், 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர் கலந்து கொள்ளலாம். காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும். இதற்கான பயிற்சி கட்டணம் ஏதும் கிடையாது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703503 என்ற செல் எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.