Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாய்கள் பிறந்த 3 மாதத்தில் தடுப்பூசி கட்டாயம் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன.5: நாய்கள் பிறந்த 3 மாதத்தில் தங்களது நாய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: ரேபிஸ் நோய் தாக்கம், நோயின் அறிகுறிகள் தடுப்பு நடவடிக்கை, அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளுதல், நாய் கடித்தாலோ அல்லது நக்கினாலோ உடனடியாக அந்த இடத்தை நீர் மற்றும் சோப்பினை கொண்டு நன்றாக சுத்தம் செய்தல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் தொடர்ந்து, 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4 தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுதல் ஆகியன குறித்து பொதுமக்கள் முறையாக அறிந்து கொள்ள

வேண்டும்.

இத்தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்தது என்று அலட்சியமாக இருத்தல் கூடாது. நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3 மாதத்தில் தங்களது நாய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும். பிறகு முறையாக கால்நடை மருத்துவரை அணுகி, அவ்வப்போது தடுப்பூசிகள் போட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.