மானாமதுரை, ஆக.29: மானாமதுரையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 5.30 மணிக்கு இடி மின்னலுடன் திடீர் மழை பெய்ய துவங்கியது. வெயில் கொளுத்தியதால் வீடுகளில் வெப்பம் அதிகரித்து இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதமான மழையால் தெருக்களில் மழைநீர் வழிந்தோடியது.
+
Advertisement



