Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சாயல்குடி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்ட நடவடிக்கை; ராஜகண்ணப்பன் எம்எல்ஏ உறுதி

சாயல்குடி: முதுகுளத்துார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் குடிநீர் வசதி வேண்டி மனுக்கள் அதிகமாக வந்தது. திமுக ஆட்சியில் ரூ.2,819 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள கரூர், ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து பகுதிக்கும் முறையாக செயல்படுத்த இந்த அரசை வலியுறுத்தப்படும் என்றார். தொடர்ந்து ஏர்வாடி தர்ஹாவில் சொந்த நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் யாத்திரீகர்கள் தங்கும் கூடம் கட்டுமானப் பணிகள், அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மருத்துவமனை, உணவு கூடம், குடிநீர், கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு கைத்தொழில் பயிற்சி கற்போருக்கு போர்வைகள் வழங்கினார்.

தொடர்ந்து ஒப்பிலான், மாரியூர், மேலமுந்தல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஆய்வு செய்து, மழைக்கால நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தினார். சாயல்குடி அரண்மனையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஜமீன்தார் சிவஞான பாண்டியன் மற்றும் சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சந்தித்து பள்ளியில் கலையரங்கம் கட்ட மனு அளித்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.