தொண்டி: தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவின் பெயரில் போஸ்ட் ஆபிஸ் சார்பில் நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
+
Advertisement


