திருப்புத்தூர், ஆக.26: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி பழையூறை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கலையரசி (38). ரமேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தையும் உள்ளது. கலையரசிக்கும், ரமேஷுக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது கலையரசி வீட்டின் பேனில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலையரசியின் உடலை திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கண்டாவராயன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



