காரைக்குடி, ஆக.28: காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை மற்றும் வீட்டு காய்கறிக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது. தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் சரவணன் தலைமை வகித்தார். மண்ணியில் தொழில்நுட்ப வல்லுநர் சேதுபதி பயிற்சி அளித்தார். பயிர் எச்சங்கள், களைகள், இலைகள், காய்கறி மற்றும் பழக் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், கழிவுகளை அடுக்குகளாக அமைத்தல், மண்புழுக்களை விடுதல், ஈரப்பதத்தை பராமரித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் செயல்விளக்கத்துடன் கூறப்பட்டது.
மண்புழு உரம் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் மற்றும் பயிர் வளர்ச்சி மேம்படுவதுடன், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க முடியும் எனவும். வீட்டு மற்றும் பண்ணை காய்கறி கழிவுகளை பயனுள்ள வேளாண் இடுபொருட்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து கூடுதல் வருமானம் பெறலாம் என வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்தனர்.



