Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடையில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

தொண்டி, ஜூன் 26: தொண்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பில் கேட்டபோது ஏற்பட்ட தகராரில் ஒருவர் மண்டை உடைந்தது. தொண்டி உருளை கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரமக்குடியை சேர்ந்த அப்துல் கரீம் (36) என்பவர் மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது அவர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் பில் கேட்டுள்ளார். அதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது அதே கடைக்கு மதுபானம் வாங்க வந்த தொண்டியை சேர்ந்த ராஜன்(36), அஜய் (28) ஆகிய இருவரும் அப்துல் கரீமிடம் சண்டை போட்டு பீர் பாட்டிலால் அப்துல் கரீம் மண்டையை உடைத்துள்ளனர். இது குறித்து புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.