Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

3 பேர் குண்டாஸில் கைது

சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழி ப்பறி கொள்ளை வழக்குகளில், கதிர்வேல் மற்றும் தண்டீஸ்வரன் கைது செய்யப்பட்டனர். மதகுபட்டி போலீஸ் ஸ்டேசன் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரண்ராஜ் என்பவரை மதகுபட்டி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிவபிரசாத், மாவட்ட கலெக்டர் ஆகாஷிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 3பேரையும் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.