Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது உணவு, குடிநீர் அருந்த கூடாது; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை: பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூச்சி நோய் தாக்குதல் ஏற்படும் இடங்களில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மற்றும் நோய்க் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்து வாங்கியவுடன் அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள லேபிளில் உள்ள வழிமுறைகளைக் கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்களையே மருந்து தெளிக்க பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடைகளையும், ரப்பர் காலனிகளையும், கைகளுக்கு பாதுகாப்பு உறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும். தெளிப்பான்களில் கசிவு ஏதேனும் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். மருந்து கைகளிலோ அல்லது உடலிலோ பட்டு விட்டால் உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை கையாள வயது முதிர்ந்தவர்களையோ கருவுற்ற தாய்மார்களையோ, குழந்தைகளை பராமரிக்கும் பெண்களையோ மேலும் நோய்வாய் பட்டவர்களையோ அனுமதிக்க கூடாது.