Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

உலக நன்மை வேண்டி பூஜை

காளையார்கோவில், ஜூலை 31: காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் (குறிப்பாக ஆடி வெள்ளி அல்லது பௌர்ணமி நாட்களில்) 1008 பெண்களுடன் திருவிளக்கு பூஜை நடைபெறும். ஆடி மாத பௌர்ணமியில் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையை, கோயில் அறங்காவலர் குமரேசன் தொடக்கி வைத்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் ஏராளமான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்களப் பொருட்கள் வைத்து கணபதி பூஜையுடன் துவங்கினர்.

விளக்கு பூஜையில் மகாலட்சுமி மற்றும் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.