Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளியில் குருபூர்ணிமா விழா

காரைக்குடி, ஜூலை 31: காரைக்குடி ஶ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் குருபூர்ணிமாக விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். முதன்மை முதல்வர் வெங்கடரமணன் முன்னிலை வகித்தார். ராஜராஜன் கல்வி குழுமங்களின் தலைவர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் துணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இத்தகைய குருக்களின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதிக்கும் சமுதாயமே உயர்ந்த இடத்துக்கு வரமுடியும். குழந்தை பருவம் முதல் கல்லூரி முடிக்கும் வரை உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை தர வேண்டும். வாழ்கையில் உயர்த்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து தந்துள்ளோம்.

உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே எங்களின் இலக்கு. சிறுவயது முதல் நீங்கள் என்னவாக வேண்டும் என கேட்டு உங்களின் இலக்குகளை அமைக்க கற்றுக்கொடுத்து உள்ளோம். அதனை அடையச் செய்ய வைப்பதற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருகிறோம். உங்களின் இலக்குகளை அடைய ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார். பிரைமரி பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்.