Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பிட்டீன்படி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். இதில் தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை பெறலாம். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 35வயதுக்குள்ளும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, பி.சி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது.

விவசாயம், வாகனம், மாசு ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒரு சில தொழில்கள் தவிர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதன் நகலினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விபரம் அறிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04575 - 240257 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.