Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மானாமதுரை அருகே தேர் சக்கரம் ஏறி மூதாட்டி படுகாயம்

மானாமதுரை, ஜூன் 30: மானாமதுரை அருகே ேமலநெட்டூர் கோயில் தேர்திருவிழாவின் போது சிறிய தேரின் சக்கரம் ஏறி மூதாட்டி படுகாயமடைந்தார். மானாமதுரை அருகே மேலநெட்டூரில் சாந்த நாயகி சொர்ணவாரீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்த போது பெரிய தேருக்கு பின்னால் சிறிய தேர் ஒன்றை பக்தர்கள் இழுத்து வந்தனர். அப்ேபாது சிறிய தேரின் சக்கரம், மேலநெட்டூரை சேர்ந்த முத்துச்சாமி மனைவி இருளாயி(70) என்பவரி்ன் வலது காலில் ஏறியதில் படுகாயம் ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.