சிவகங்கை, செப். 29: மின் வாரியத்தில் கணக்கீட்டுப் பணிக்கு ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்திட மின்வாரியம் பிறப்பித்த உத்ததவுகளை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டத் தலைவர் சாத்தையா தலைமை வகித்தார். செயல் தலைவர் காளிமுத்தன், திட்டப்பொருளாளர் ஆனந்தசெல்வம், மாநில இணைச் செயளாளர் செல்லப்பன், அமைப்புச்செயலர் காஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் சுப்பிமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மின் வாரியத்தில் கணக்கீட்டுப் பணிக்கு ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்திட மின்வாரியம் பிறப்பித்த உத்ததவுகளை திரும்ப பெறவேண்டும். 5 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 10,000 பேரை நியமிப்பதை கைவிட வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தப் பணி அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்டச் செயலாளர் முத்துராமன் நன்றி கூறினார்.


