Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்புத்தூர் பஸ்நிலையத்தில் அரசு பேருந்தில் திடீர் தீ

திருப்புத்தூர், செப். 29: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து நேற்று முன் தினம் அரசு பஸ் ஒன்று தேவகோட்டைக்கு புறப்பட்டு வந்தது. டிரைவர் கலைவேந்தன் பஸ்சை ஓட்டி வந்தார். வழியில் திருப்புத்தூர் பஸ்நிலையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு பஸ் நுழைந்தபோது, திடீரென பின் சக்கரத்திலிருந்து குபுகுபுவென புகை வெளியேறியது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை இறக்கினார். பின் சக்கரத்தில் புகை வந்த பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதை தொடர்ந்து உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விசாரணையில், ‘வண்டியில் பிரேக் ஷூ தேய்ந்ததால் சூடாகி தீப்பற்றியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்களுக்கு மாற்றப்பட்டு, பஸ் பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டது. இதனால், திருப்புத்தூர் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.