திருப்புத்தூர், செப்.29: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி விராமதி ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (58). கூலித் தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை பிரிந்து சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் பழனியப்பன் மட்டும் ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கீழச்சிவல்பட்டி காவல் நிலைய எஸ்ஐ கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், பழனியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


