Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஊரக வளர்ச்சி துறையினர் மாநாடு

மானாமதுரை, ஆக.26: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்டார கிளையின் 12வது மாநாடு மானாமதுரையில் நடைபெற்றது. மாநாட்டை கிளையின் தலைவர் ஆனந்தமுருகன் தலைமை வகித்து நடத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் காளிமுத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, கல்லல் கிளையின் செயலாளர் இதயகண்ணன் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் செல்வகுமார் நிறைவுரையாற்றினார். நிர்வாகி பரமன் நன்றி கூறினார்.