Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

மானாமதுரை, டிச.23: மானாமதுரை அருகே 108 ஆம்புலன்ஸ்சில் இளம் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி பிரியதர்ஷினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவவலி எடுத்துள்ளது.

வீட்டில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார். வரும் வழியில் பிரசவ வலி அதிகமாகியதால் மருத்துவ பணியாளர் ரீனா அவருக்கு, ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தார். இதில் பிரியதர்ஷினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாயும், குழந்தையும் சேர்த்தனர்.