Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முதல்வர் பிறந்தநாளையொட்டி அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்: 4 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், ஜூன் 23: திருப்புத்தூரில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி திருப்புத்தூர்-சிவகங்கை சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

இதில் நடுமாடு பிரிவில் 14 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 19 ஜோடிகள் என மொத்தம் 33 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மாட்டுவண்டி பந்தயம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திருப்புத்தூர் விஏஓ ராஜகுரு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருப்புத்தூர் போலீசார் தென்மாப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (35), கணேசன் (50), நவீன்குமார் (35), சண்முகம் (38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.