திருப்புத்தூர், ஆக.20: கீழச்சிவல்பட்டி அருகே நெய்வாசலைச் சேர்ந்தவர் மைக்கேல்(70). இவர், நேற்று காலை வீட்டிலிருந்து கீழச்சோல்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவம் பார்க்க நடந்து வந்துள்ளார். அப்போது போலீசார் சோதனைச் சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற போது, புதுக்கோட்டையில் இருந்து திருப்புத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
+
Advertisement



