Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடன்களை தள்ளுபடி கோரி இன்று கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்

திருவாடானை, ஜூலை 20: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா குழு கூட்டம் தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் செந்தில்குமார், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் நிலுவையில் உள்ள கூட்டுறவு கடனையும் இணைத்து தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாடானையில் கூட்டுறவு வங்கி முன்பு இன்று மாலை 3 மணி அளவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது.இந்த போராட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.