Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

மானாமதுரை, ஜூலை 20: மானாமதுரை ஆதனூர் கண்மாய்கரை அருகே நேற்று அடையாளம் தெரியாத முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது, இறந்த நபர் 65 வயதுள்ள முதியவர், காவி வேட்டி அணிந்துள்ளார். கண்மாய் கரையில் உள்ள கருவேலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்த நபரை யாரும் பார்த்தது இல்லை என்று இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.